மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடித்து அழிக்கப்பட்ட சிவராத்திரி வளைவு நீதிமன்ற ஆணையின் பிரகாரம் காவல்துறை பாதுகாப்புடன் இன்று மீளவும் அமைக்கப்பட்டு வருகின்றது. சிவராத்திரி பூசைகளுக்காக திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் நுழைவாயிலில் வளைவு ஒன்று நிறுவப்பட்டிருந்த நிலையில், குறித்த வளைவு நேற்றய தினம் கிறிஸ்த்தவ மக்களால் இடித்து அழிக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சா் மனோகணேசனின் வழிகாட்டலில் இந்த விடயம் இன்று காலை மன்னார் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அழிக்கப்பட்ட வளைவை மீள அதே இடத்தில் 4 நாட்களுக்கு நிறுவுமாறு, நீதிவான் ஆணையிட்டிருந்தார்.இதற்கமைய குறித்த வளைவு காவல்துறை பாதுகாப்புடன் மீளவும் அதே இடத்தில் நிறுவப்பட்டு வருகின்றது.