இதுவா பச்சைப் பிள்ளை? டுவிட்டரில் கோத்தபயாவுக்கு பதிலடிகள்!

ஒரு குழந்தையைக் கைது செய்து அக்குழந்தையின் தந்தைக்கு சிக்கலைக் கொடுக்கும் பழிவாங்கும் அரசியல் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சேவைக் கைது செய்ததை டுவிட்டரில் விமர்சித்துள்ளார் அவரது சகோதரரும் ஸ்ரீலங்கா முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபயா ராஜபக்சே.
 
ஆனால் அவர் போட்ட இந்த டிவிட்டுக்கு பலரும் கடுமையாக பதில் டிவிட் போட்டு கோத்தபயாவை கலங்கடித்து வருகின்றனர்.
 
தமிழர்களும், சிங்களர்களும் பாரபட்சமே இல்லாமல் கோத்தபயாவை அவரது டிவிட்டுக்குப் பதிலடி கொடுத்தும், சமூக வலைதளத்தின் பிற பக்கங்களிலும் சரமாரியாக கருத்துக்களை பதிவேற்றி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
ராஜபக்சேவின் மகனான யோசித ராஜபக்சே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் ஆவார். சமீபத்தில் அவர் நிதிமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் யோசிதவின் தோழியின் கையில் யோசித கடிப்பது போல இருக்கும் படத்தைப் போட்டு இவரா குழந்தை என்றும் பலர் கிண்டலடித்துள்ளனர்.
டுவிட்டரில் தொடர்ரும் கருத்து தாக்குதல்களால் கோத்தபாய திணறிப்போயிருப்பதாக இந்திய ஊடகங்கள் மேற்குறிப்பிடப்பட்ட புகைப்படத்துடன் செய்திகளை வெளியிட்டுள்ளன.
கோத்தபாய ராஜபக்சமகிந்த ராஜபக்சயோசித ராஜபக்ச
Comments (0)
Add Comment