இது தம் தேசம் என முல்லையில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய இராணுவம்…

முல்லைத்தீவில் இராணுவத்தினர் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனியார் நிறுவனம்  ஒன்றை சேர்ந்தவர்கள் இன்று காலை  முல்லைத்தீவு தண்ணீர் முறிப்பு பகுதியில் படப்பிடிப்பிற்காக  சென்றுள்ளனர்.

அப்போது தண்ணீர் முறிப்பு பிரதேசத்தில்  அவர்களை  இடைமறித்த  அரசபடையினர் வாகன இலக்கம் மற்றும் பயணிப்போர் விபரங்களையும் பதிந்து அனுப்பியுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் குளக்கட்டின் கீழ் உள்ள புராதன  விநாயகர் ஆலயத்தினை படம்பிடிக்கையில்  இங்கு எதுவும் செய்ய முடியாதென கூறி அரச தடுத்துள்ளனர்.

அப்போது ஊடகம் சார் நிகழ்ச்சி என அக்குழுவினர் விளக்கி கூறி, பின்னர் அடையாள அட்டைகளை காண்பித்த போது அச்சுறுத்தியதோடு இது தம் தேசம் என இராணுவம்  முரண்பட்டுக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

அப்போது சிவில் உடையிலும் அப்பகுதியில் இருந்த சில ஸ்ரீலங்கா அரசபடையினரும் வந்தனர், அப்போது குறித்த நிகழ்ச்சியின் குழுவினர் சிவில் உடையில் நிற்பவர்களுக்கு அடையாள அட்டையை காண்பிக்க முடியாதென்ற போது,

காவலரணில் இருந்த மேலதிக சிவில் உடையிலிருந்தவர்கள் சூழ்ந்து கொண்டு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் அறியமுடிகின்றது.

இருப்பினும் தடைகளை தாண்டி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு அப்பகுதியில் நடந்ததாக குறித்த நிகழ்ச்சியின் குழுவினர்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  தங்களின் ஆட்சியில் ஊடக சுதந்திரம், ஊடகவியலாளர்களுகான சுதந்திரம் முழுமையாக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிதண்ணீர் முறிப்புமுல்லைத்தீவுமைத்திரிபால
Comments (0)
Add Comment