இலங்கைக்கான சுற்றுலா நுழைவிசாவில் சென்று தவில் கச்சேரியில் ஈடுபடும் இந்திய தவில் வித்வான்களை கைது செய்ய வடக்கு மாகாண முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையினை வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண சபையின் 125ஆவது அமர்வு வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
குறித்த அமர்விலேயே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் உள்ள ஆலயத் திருவிழாக்களின்போது இந்தியாவிலிருந்து சுற்றுலா நுழைவிசைவில் அங்கு செல்லும் இந்திய தவில் வித்துவான்கள் குறைந்த பணத்துக்கு தொழில் செய்வதால் உள்ளூர் வித்துவான்கள் மிகவும் பாதிப்படைகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.