இந்தியாவில் இணைய தள வேகம் குறைவாக இருப்பது ஏன்? – மோடி கேள்வி

இந்தியாவில் இணைய தள வேகம் குறைவாக இருப்பது ஏன் என பிரதமர் நரேந்திர மோடி கேள்வியெழுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தகவல் தொடர்புத் துறைக்கு தகவல் சென்றிருப்பதாகவும், தொலைத் தொடர்பு ஆணையமான ட்ராயிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும் டெல்லியில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் மின்னணு வசதிகள் மூலம் அரசுத் துறைகளை இணைப்பதில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு தடங்கலாக இணைய தள வேகம் குறைவாக இருப்பதாக அவர் கருதுவதாக, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், ட்ராய் பரிந்துரைத்துள்ள இணைய தள வேகத்தைவிட அதிகமாகவே சேவை அளிக்கப்படுவதாக தொலைபேசி நிறுவனங்கள் தரப்பில் விளக்கம் தரப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக பிரதமர் மோடியை யுனிலீவர் தலைமை அதிகாரி பால்மன், இன்ட்டெல் நிறுவன தலைவர் ஜேம்ஸ் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இணையதளம்இந்தியாகாரணம்குறைவுதகவல்துறைதொடர்பாடல்தொழில்நுட்பம்நரேந்திரபிரதமர்மோடிவேகம்
Comments (0)
Add Comment