இந்தியாவில் ரகசிய அணுஆயுத நகரம் உருவாக்கி வருகிறதா? : அமெரிக்க பத்திரிகை தகவல்

அணுஆயுதங்களை தயாரிக்கும் திறன் கொண்ட ரகசிய அணுசக்தி நகரத்தை இந்தியா கட்டி வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

கர்நாடக மாநிலம் சல்லக்கரே என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் இந்த நகரம் 2017ல் பூர்த்தியாகும் என்றும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்நகரத்தில் அணு சக்தி ஆய்வகங்கள், அணுஆயுதங்கள் தாங்கிய ராக்கெட்டுகளை சோதிக்கும் வசதிகள் என பல்வேறு வசதிகள் இருப்பதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிடம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அதிகளவில் இருப்பது சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டுகளை தயாரிக்க வழிவகுக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் இப்பத்திரிகை கூறியுள்ளது. சில நாடுகளின் அரசு அதிகாரிகள் சிலரிடம் இருந்து திரட்டிய தகவல் படி இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அணுசக்தி நகர திட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் அப்பத்திரிகை கூறியுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து அதிகரித்து வரும் சவால்களை சமாளிப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

அணுஆயுதங்கள்அமெரிக்க பத்திரிகைஇந்தியாரகசிய அணுஆயுத நகரம்ஹைட்ரஜன் குண்டுகள்
Comments (0)
Add Comment