இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயத்தை முன்னிட்டு ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் குறித்த உலங்கு வானூர்தி பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
இதன்போது, டன்பார் மைதானத்தை சுற்றியுள்ள குடியிருப்புக்களில் ஐந்து வீடுகளின் கூரைகள் சேதமாகியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிக வலுவுடையை குறித்த உலங்கு வானூர்தியின் விசிறியின் காற்று வீசியதாலேயே குடியிருப்பின் கூரைப் பகுதிகள் காற்றினால் அள்ளுண்டுள்ளது.இதன்போது, யாழ்ப்பாணத்தின் இந்திய உதவித்தூதுவர் ஆர். நடராஜன் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் உட்பட இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன், மாகாணசபை உறுப்பினர்களான சே.ஸ்ரீதரன், கணபதிகனகராஜ், ஆர். ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 12ஆம் திகதி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை திறத்து வைக்க இந்திய பிரதமரின் வருகைதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.