இந்திய தேசிய புலனாய்வு பணியக அதிகாரிகள் சிறீலங்காவிற்குப் பயணம்

இலங்கை அதிகாரிகளுடன் அவசர சந்திப்புக்காக இந்திய தேசிய புலனாய்வு பணியக அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புக்காக வேவு பார்த்ததாக சந்தேகத்தில் இலங்கை தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்தே இந்த அவசர சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்திப்புக்கான அனுமதியை கோரும் கடிதமொன்றை அவர்கள் இலங்கை உள்துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கவுள்ளனர். ஹைதராபாத்தில் ‘ஐஸ் இவென்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்திவந்த அருண் என்ற இலங்கைப் பிரஜையை சிலமாதகாலமாக தாம் கண்காணித்து வந்தனர் என்றும் அதன் பின்னரே சென்னையில் வைத்து அவரைக் கைதுசெய்தனர் என்றும் இந்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள் கூறினர்.

அதிகாரிகளுடன்அதிகாரிகள்அவசரஇந்தியஇலங்கைஇலங்கைக்குசந்திப்புக்காகதேசியபணியகபுலனாய்வுவிஜயம்
Comments (0)
Add Comment