பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்களிடம் பல லட்சம் பணம் வசூலித்த இந்திய
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளருக்கு
அமெரிக்க நீதிமன்றம் சுமார் 346 கோடி ரூபாய் (50 million) அபராதம் விதித்துள்ளது.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஸ்ரீனிபாபு கெடேலா அமெரிக்காவில் OMICS, iMEDPub மற்றும் கான்பரன்ஸ் சீரிஸ் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
அவர், தனது நிறுவனம் மூலம் வெளியாகும் ஆய்வு கட்டுரைகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஆசிரியர்கள் திருத்தம் செய்வதோடு, பலர் பார்வையிட்டு கருத்து தெரிவிப்பர் என ஆசை வார்த்தைகளையும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அதனை நம்பி ஆய்வு கட்டுரை சமர்பித்த ஆராய்ச்சியாளர்களிடம் கட்டுரைகளுக்கு பல லட்சம் பணம் வசூலித்துள்ளார்.
அதோடு , பிரபல விஞ்ஞானிகளின் பெயரை பொய்யாக பயன்படுத்தி கருத்தரங்கு நடத்தியதாகவும் அவர்மீது கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க நுகர்வோம் அமைப்பான FTC (பெடரல் வர்த்தக கமிஷன்) வழக்கு தொடர்ந்தது.
அவர்மீது முமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து மாவட்ட நீதிமன்றம், பத்திரிகையாளர் ஸ்ரீனிபாபு கெடேலாவுக்கு 346 கோடியே 25 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.