இந்திய பாக்கிஸ்தான் எல்லையில் நவீன லேசர் தடுப்பு சுவர்!

இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் லேசர் சுவர்களை இந்திய ராணுவம் அமைத்திருக்கின்றது.இதனால் தீவிரவாத ஊடுருவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியின் ஆற்றுப்படுகைகளில் முட் கம்பி வேலி அமைப்பது பெரிய அளவில் பலனை தராது. தண்ணீர் ஓடும் காலங்களில் அப்பகுதியைக் கண்காணிக்க எல்லையையொட்டி ரோந்து செல்வதும் மிகவும் கடினமானதாக இருந்த காரணத்தினால் எனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் லேசர் சுவர்கள் இப்பகுதிகளில் அமைக்க இந்தய அரசு முடிவு செய்தது.

இதன்படி ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் அமைந்துள்ள சில எல்லைப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அகச்சிவப்பு மற்றும் லேசர் கற்றை சுவர்களை நிறுவும் பணிகளை எல்லைப் பாதுகாப்பு படைகள் மேற்கொண்டு வந்தன.இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் நிறுவப்பட்ட லேசர் சுவர்கள் தற்போது செயற்பாட்டிற்கு வந்துள்ளன.

லேசர் சுவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் செயல்படுபவை என்பதால் இவற்றின் மூலம் சர்வதேச எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் ஊடுருவலை எளிதில் கண்காணிக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொழில்நுட்பம் மூடுபனி காலங்களிலும் வேலை செய்யும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விஷேட அம்சமாகும்.

இந்தியாஊடுருவல்கண்காணிப்புசுவர்தடுப்புதொழில்நுட்பம்பாக்கிஸ்தான்மூடுபனிலேசர்
Comments (0)
Add Comment