கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற இந்திய போர்க்கப்பல்களும், இலங்கை கடற்படைக்கு சொந்தமான கடற்கலங்களும் கூட்டு பயிற்சியில் நேற்று ஈடுபட்டன.
நல்லெண்ணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு சென்றிருந்த இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா என்ற விமானந்தாங்கிப் போர்க்கப்பலும், ஐஎன்ஸ்எஸ் மைசூர் என்ற நாசகாரி போர்க்கப்பலும், இலங்கை கடற்படையுடன் இணைந்து நேற்று கூட்டுப் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டன.
ஐஎன்எஸ் விக்கிரமாதித்யாவும், ஐஎன்ஸ்எஸ் மைசூரும், நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கான பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டன. இந்திய கடற்கலங்களுக்கு இணையாக இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான சயுர, சமுத்ர ஆகியனவும், மூன்று அதிவேகத் தாக்குதல் படகுகளும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டன. இந்த பயிற்சி நடவடிக்கைகள் சுமார் ஐந்து மணிநேரம் நீடித்தது. இதையடுத்து, இந்திய போர்க்கப்பல்கள், விசாகப்பட்டினம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றன.