இந்திய மத்தியரசின் உயர்மட்ட குழு இலங்கை வருகிறது?

இந்திய மத்தியரசின் உயர் மட்டக்குழுவினர் இவ்வார இறுதியில் இலங்கைக்கு வருகின்றனர். அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வரும் இந்த உயர் மட்டக் குழுவினர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பதுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.
குறிப்பாக இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுவில் தீர்மானிக்கப்பட்ட உத்தேச பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் (எட்கா) தொடர்பாக இந்திய மத்தியரசின் உயர் மட்ட குழுவினர் அவதானம் செலுத்த உள்ளனர்.
உள்நாட்டில் தேசிய அரசியலில் சூடுபிடித்துள்ள எட்கா ஒப்பந்தத்தை நிறைவேற்றும் உறுதியான நிலைப்பாட்டில் பிரதமர் உள்ள நிலையில் நல்லாட்சியின் பங்காளிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் விமர்சிக்கி ன்றனர்.
இதனால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ள இலங்கை – இந்திய கூட்டு ஒப்பந்தம், இந்திய உயர் மட்ட குழுவினரின் இலங்கை விஜயத்தின் போது கூடிய கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.
எவ்வாறாயினும் இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைப்பெறவுள்ள மனித வள உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் இலங்கை வரும் இந்திய உயர் மட்ட குழுவிற்கு தகவல் தொழில்நுட்ப, உள்ளுராட்சி நிர்வாகம் மற்றும் நகர அபிவிருத்தி மத்தியமைச்சர் கே.டி.ராமா ராஹோ தலைமைத்தாங்குகின்றார்.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து மனித வள உச்சி மாநாட்டினை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியின் பணிப்பாளர் கலாநிதி அமிட் றோர் ஆகியோர் விஷேட உரை நிகழ்த்த உள்ளனர்.

இந்தியாஇலங்கைஉச்சிமாநாடுகுழுதொழில்நுட்பம்பேச்சுவார்த்தைமத்தியரசு
Comments (0)
Add Comment