இந்திய மீனவர்களுக்கு சொந்தமான 87 மீன்பிடி படகுகளை இலங்கை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியதாவது:
டிசம்பர் 12-ம் தேதி நிலவரப்படி இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான 87 படகுகளை கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது பறிமுதல் செய்து தனது கட்டுப்பாட்டில் இலங்கை அரசு வைத்துள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்