இந்திய மீனவர்கள் போதைவஸ்து கடத்தலில் ஈடுபடவில்லை – வெங்கையா நாயுடு

இலங்கையில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள 5 இந்திய மீனவர்களும் போதைவஸ்து கடத்தலில் ஈடுபடவில்லை என்று பா.ஜ.கட்சியின் முக்கியஸ்தரும் ,அமைச்சருமான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த 5 மீனவர்களையும் காப்பாற்ற மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 இந்திய மீனவர்களுக்கும் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டமையானது அதிர்ச்சியளிக்கும் செயல் என்று இலங்கையின் அமைச்சர் ஒருவரிடம் தாம் சியோலில் வைத்து தெரிவித்ததாக நாயுடு கூறினார்.

இந்த தீர்ப்பினால் இந்தியர்கள் கோபமடைந்துள்ளமையையும் தாம் இலங்கை அமைச்சருக்கு தெரிவித்ததாக மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சர்இந்தியாஇலங்கைஈடுபடவில்லைகடத்தல்கட்சிதீர்ப்புபாஜகபோதைவஸ்துமரண தண்டணைமீனவர்முக்கியஸ்தர்வெங்கையா நாயுடு
Comments (0)
Add Comment