இந்திரா காந்தி சர்வதேச விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடும்பனி சூழ்ந்துள்ளதால் விமான போக்குவரத்து கடுமையாக பதிக்கப்பட்டுள்ளது. அங்கு விமான ஓடு தளங்கள் மூடப்பட்டுள்ளது. காலையில் மூடுபனி காரணமாக தொலைவில் உள்ள பெருட்கள் சரிவர பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 10 மணிக்கு மேல் நிலைமை சீராகலாம் என்று கூறப்படுகிறது.

பனி காரணமாக இதுவரையில் 24 உள்நாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து விமானங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக அங்கு நிலை சீராக இருந்தநிலையில் தற்போது மீண்டும் அதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவிற்கு செல்லக் கூடிய பயணி கூறுகையில் “எங்களால் விமானத்திற்கு வெளியே ஒன்றையும் ஜன்னல் வழியாக பார்க்கமுடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் விமானம் தாமதம் குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது”  என்று கூறியுள்ளார்.

விமான சேவை
Comments (0)
Add Comment