இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு…

இந்தோனேசியாவின் சுந்த் ஸ்ட்ரெய்ட் (Sunda Strait) பகுதியில் சுனாமி தாக்கியதில் 168 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவீல் பகுதியில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த சுனாமியால்  . வீடுகள், மேம்பாலங்கள், சாலைகள் சேதமடைந்ததுள்ளது.

அதோடு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளதோடு . சுமார் 745 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பலபேரை  காணவில்லை எனவும் தெரிவிக்கபப்டுகின்றது.

இந்நிலையில்  காணாமல்போனோரை  தேடும் பணி  இடம்பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சுனாமி தாக்குதலை தேசிய பேரிடராக அறிவித்துள்ள இந்தோனேசிய அரசு, மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிட்த்தக்கது.

இந்தோனேசியாசுனாமிபலிபேரிடர்
Comments (0)
Add Comment