இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணறு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் மேற்கே அமைந்த அசே மாகாணத்தில் எண்ணெய் கிணறில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளதோடு 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பேரிடர் கழகம்
இந்த நிலையில் இந்தோனேஷியாவின் பேரிடர் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், குழாய்களை வெல்டிங் செய்யும்பொழுது இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.
இதேவேளை எண்ணெய் கிணறில் சட்டவிரோத முறையில் துளையிட்டதனால் 5 பேர் கொல்லப்பட்டதோடு 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அன்டாரா அரசு கழகம் இதற்கு முன் வெளியிட்ட தகவலில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.