இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு மாதரம் பகுதியில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை சமீபத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தநிலையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.