தமிழகத்தில் பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கி விட்டது. பல இடங்களில் மதிய வேளையில் சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பொதுமக்கள் வெளியில் வருவதைக் குறைத்துக் கொண்டனர்.
குறிப்பாக வேலூர், திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், காற்றின் ஈரப்பதம் வெகுவாகக் குறைந்து வருவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், தற்போது தமிழகத்தில் பரவலாக 95 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதோடு, இந்த கோடை காலத்தில் சென்னையில் சுமார் 112 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.