இலங்கையினுல் இனவாதத்தை உருவாக்கியது மக்கள் இல்லை என்றும் , அரசியல் தலைவர்கள் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனை சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அரசியல் பலத்தை பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு கீழ் தனமான வேலையை செய்தாவது ஆட்சியை பிடிப்பதற்கு இவ்வாறு இனவாதம் தூண்டிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகளுக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழ் மக்களுக்கு தாம் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வாறான மனநிலை இருந்தால், பிரச்சினைகளைத் தீர்த்து முன்னோக்கி செல்லக்கூடிய சூழ்நிலையை உருவாக முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.