இன்றிரவு 10.00 மணி முதல் மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங்கு உத்தரவு…

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலையடுத்து அங்கு நிலவும் அசாதாரணமான சூழ்நிலையால் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து தொடர்ந்து இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றமை குறீப்பிடத்தக்கது.

இலங்கைஊரடங்கு
Comments (0)
Add Comment