இன்றுடன் முடிவுக்கு வருகிறது மின் வெட்டு!

நேர அட்டவணையின்படி நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு இன்றுடன் முடிவுக்கு வருகிறது என ஸ்ரீலங்காவின் மின்சக்தி மற்றும் எரிபொருள் அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவித்தார்.
இன்று காலை வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நுரைச்சோலை அனல் மின் நிலையம் நேற்றிரவில் இருந்து மீண்டும் செயற்படுகிறது. இதனால் தேசிய மின் உற்பத்தி 600 மெகாவாட் அதிகரித்துள்ளது. இதனால் அட்டவணைப்படுத்தப்பட்ட மின்வெட்டு ரத்துச் செய்யப்பட்டு தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் என்றார்.
இலங்கைசபைநுரைச்சோலை அணுமின் நிலையம்மின்சாரம்மின்வெட்டு
Comments (0)
Add Comment