பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், நட்பு அடிப்படையில் மரியாதை நிமித்தமாக திருமாவளவனை சந்தித்துப் பேசினேன். தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடுவது பயனற்றது என்று திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.