இன்று முதல் தலைக்கவசம் கட்டாயம்: அமலுக்கு வருகிறது தமிழக அரசின் உத்தரவு!

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும், உடன் பயணிப்பவர்களும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தலைக்கவசம் அணியத் தவறினால், இருசக்கர வாகனத்தின் ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் தலைக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும் என அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இதைத் தொடர்ந்து, தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது. இந்த உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், அதனை செயல்படுத்தவும் காவல்துறை தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

அரசாணைஆவணங்கள்உத்தரவுஉயர்நீதிமன்றம்ஓட்டுநர் உரிமம்கட்டாயம்தமிழக அரசுதலைக்கவசம்பறிமுதல்
Comments (0)
Add Comment