இம்மாதம் 30ஆம் திகதியன்று, இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் காணாமல் போனோர் அலுவலகம் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் செய்யப்படுதலுக்கெதிரான சர்வதேச தினம், ஓகஸ்ட் 30 ஆம் திகதி ஆகும்.
இந்த நிலையில் அந்த தினத்துடன் சேர்ந்து வரும் வகையில் இடைக்கால அறிக்கை வெளிவரவுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வலிந்து காணாமல் செய்யப்படுதலுக்கெதிரான சர்வதேச தினம், காணாமல் போனோர் அலுவலகத்தால் ஓகஸ்ட் 30 ஆம் திகதியன்று மாலை 3 மணி தொடக்கம் 5 மணி வரை, கொழும்பு-07 ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மையத்தில் நினைவு கூரப்படஉள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் அலுவலகம், ஜனாதிபதி வழக்குரைஞர் சாலிய பீரிஸினால் தலைமை இயங்கிவருகின்றமை நினைவில்கொள்ளத்தக்கது.
இதேவேளை இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம், கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.