20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பாய், தலையணையுடன் படுத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் கடந்த 10 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து, காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்