இராணுவத்தினரால் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளது..

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர்  கோத்தபாயராஜபக்ச காலத்தில் கிளிநொச்சி  கலாச்சார பண்பாட்டு மண்டபம் மற்றும் சந்திரன் பூங்காவில் பாரிய கட்டடங்கள் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்தன.

ஆக்கிரமிப்பு எண்ணத்தோடு பொலநறுவை காலத்தான் என குறிப்பிடப்படுகின்ற மிக தொன்மைவாய்ந்த கற்கள் கொண்டு குறித்த  மதில்கள் அமைக்கப்பட்டிருந்ததோடு,

அவை சிதைக்கப்பட்டு மிக நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது போல் ஒரு இருப்பினை இராணுவத்தினர் அமைத்திருந்தார்கள்.

குறித்த  கட்டிடங்கள் கிளிநொச்சியில் நூற்றாண்டுகாலமாக சிங்கள ஆதிக்கம் நிலவி வருவதன் அடையாளமாக காட்டுவதற்கான  அவர்கள் நிறுவி  இருந்தனர்.

இந்தநிலையில்  குறித்த கட்டடங்களை  கரைச்சி பிரதேச சபை  நேற்றைய தினம்  அகற்றியுள்ளமை தமிழ் மக்கள் மனதில் பெரும்மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடந்த 03 வருடங்களாக தொடர்சியாக, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அவற்றை அகற்றுமாறு கோரிக்கை விடுத்து வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இடித்தழிப்புஇராணுவம்கட்டடங்கள்கிளிநொச்சிபிரதேசசபை
Comments (0)
Add Comment