இராணுவம் வீதிக்கு இறக்கப்பட வேண்டும்- யாழில் பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் போராட்டம்..

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இராணுவம் வீதிக்கு இறக்கப்பட வேண்டும் என்று கோரி பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்  பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள்,

மற்றும்   சில பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் இந்த  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுணதீவில் இரு பொலிஸார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலேயே மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவம் வீதிக்கு இறக்கப்பட வேண்டும் என்ற பிரதான கோசம்  ஆர்ப்பாட்டக்கராரகளால் முன்வைக்கப்பட்டது.

இதேவேளை இந்த  போராட்டத்திற்கு பின்புலமாக சிவில் உடை தரித்த இராணுவம் மற்றும் பொலிஸார் இயங்கியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அதுமாத்திரமல்லாது  இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போதும் சிவில் உடை தரித்த இராணுவம் மற்றும்  பொலிஸாரும்  குறித்த ஆர்ப்பாட்டத்தில்  இணைந்திருந்ததாக தெரிவ்யவந்துள்ளமையும் இங்கு   குறிப்பிடத்தக்கது.

இராணுவம்கிழக்குதமிழ்பொதுஜன பெரமுன கட்சிமக்கள்வடக்கு
Comments (0)
Add Comment