இருப்பக்க நுரையீரலையும் மாற்றி மலர் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு இரண்டு பக்க நுரையீரலும் மாற்றிப் பொருத்திச் சென்னை போர்டிஸ் மலர் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.  உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இகோர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இடைத்திசு நுரையீரல் நோயால் பாத்திக்கப்பட்டு வந்தார்.

இதன் காரணமாக அவருடைய ரத்த ஓட்டத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு 70 சதவிகிதமாகக் குறைந்து நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார்.   இந்நிலையில் இந்த ஆண்டு மே மாதம் சென்னை போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இகோருக்கு மாற்று நுரையீரல் பொருத்தும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த ஜூன் மாதம் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் நுரையீரலைத் தானமாகப் பெற்று, மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், சுரேஷ் ராவ் ஆகியோரின் தலைமையிலான குழுவினர் இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர்.   இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மருத்துவர் சுரேஷ் ராவ்,  இந்த அறுவைச் சிகிச்சையை சவாலுடன் செய்து முடித்ததாகத் தெரிவித்தார்.

உக்ரைன்சாதனைசிகிச்சைநாடுநுரையீரல்நோயாளிமருத்துவமனைமருத்துவர்கள்மலர்மாற்று
Comments (0)
Add Comment