நாடாளுமன்றத்தை கலைத்த தனது முடிவின் மக்கள் கருத்தறியும் விதமாக ஜனாதிபதி தேர்தலையும் சேர்த்தே நடத்த விரும்புவதாகவும், அதற்கு வாய்ப்புள்ளதா?“ எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி அப்பிராயம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த சட்டரீதியாக எந்த தடையும் இல்லையென்பதை ஆணைக்குழு கூறியுள்ளது.
அதோடு அரசியலமைப்பின் படி தற்போது நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு மாத்திரமே, நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை என்றும்,
ஆனால், இரண்டு தேர்தல்களையும் சேர்த்தே நடத்துவதென்றால், அதிகளவான ஆளணி தேவை என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இரண்டு தேர்தல்களையும் சமநேரத்தில் நடத்துவதெனில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமென இதன்போது ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இது தொடர்பில் , அடுத்த வாரமளவில் மீண்டும் ஆணைக்குழு உறுப்பினர்கள் அல்லது ஆணைக்குழுவின் தலைவருடன் சந்திப்பு நடத்த விரும்பவதாக, இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.