இரு வகை மலேரியா ஒட்டுண்ணிகளின் தொற்று உடல் ஆரோக்கியத்தை பாரிய அளவில் பாதிக்கின்றது என அண்மைய ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது. இவ் ஒட்டுண்ணிகள் ஒன்றுக்கொன்று வாழ உதவுகின்றன. இவ் ஆய்வில் விஞ்ஞானிகள் பொதுவான இருவகை மலேரிய ஒட்டுண்ணிகளும் ஒன்றாக தொற்றுகையில் ஏற்படும் விளைவு பற்றி ஆராய முற்பட்டிருந்தனர்.
இரு வேறு ஒட்டுண்ணிகளும் மனித உடலை வெவ்வேறு வழிகளில் தாக்குகின்றன என்பது முன்னர் அறிந்ததே. ஆனால் தற்போதைய ஆய்விலிருந்து ஒரு வகை பக்ரீரிய இனம் மற்றைய இனத்தின் விருத்திக்கு வழிவகுப்பது தெரிய வந்துள்ளது. மனிதர்களில் P. falciparum எனும் இனம் செங்குருதிக் கலங்களினூடாக எல்லா வயதினரிடையேயும் தொற்றுகின்றது.
மற்றைய இனமான P. vivax இளம் வயதினரை செங்குருதி கலங்கள் மூலம் தாக்குகின்றது. எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து முதல் வகை ஒட்டுண்ணி இரண்டாவது வகை ஒட்டுண்ணியிலும் அதிகமான செங்குருதிக் கலங்களை பாதிப்பது தெரியவந்துள்ளது. இதில் முதல் வகை ஒட்டுண்ணிகள் மில்லியன் கணக்கில் செங்குருதிக் கலங்களை அழிக்கின்றது.
இவ் அழிக்கப்பட்ட கலங்களை மனித உடல் மீள உற்பத்தி செய்கிறது.மீளுருவாக்கப்பட்ட செங்குருதிக் கலங்கள் இரண்டாவது வகை தொற்றுக்களால் விரைவில் ஆக்கிரமிக்கப்படுகின்றன. ஆனாலும், இருவகை ஒட்டுண்ணிகளுக்குமிடையிலான இடைத்தொடர்பு இன்னமும் தெளிவுபடுத்தப்படாத நிலையிலேயே உள்ளது.