இறகுப்பந்துக் கழக தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி ராமதாஸ் அதிரடி நீக்கம்

தமிழ்நாடு இறகுப்பந்துக் கழக தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் பொருளாளர் ராஜ்குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதாலும், தன்னிச்சையாக அதிகாரத்தை பயன்படுத்தியதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அன்புமணியிடம் ஒப்படைக்கப்பட்ட லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எங்கே போனது எனத் தெரியவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இதனால் அவரை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக ராஜ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அன்புமணிஇறகுப்பந்துகழகம்தமிழ்நாடுதலைவர்நீக்கம்பொறுப்புராமதாஸ்
Comments (0)
Add Comment