இதையடுத்து, மனைவி சடலத்தை தோளில் போட்டுக்கொண்டு, ஊருக்கு நடக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அவரது மகளும் உடன் நடந்துவந்தார். சுமார் 10 கி.மீ தூரம் நடந்து சென்ற பிறகு, சில இளைஞர்களை இதை பார்த்து பரிதாபப்பட்டு, விசாரித்து விவரம் அறிந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். தகவல் அறிந்ததும், அமன்கடி இறுதி சடங்கிற்கு வேண்டிய நிதி உதவியை செய்வதாக கலெக்டர் உறுதியளித்துள்ளார். இந்த போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன. கடந்த மே மாதம் இதேபோல ஒடிசாவில் ஒரு சம்பவம் நடந்தது. வாகனத்திற்கு பணமில்லாததால் ஏழைகள் சிலர் உறவுக்காரர் சடலத்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு தூக்கி சென்றது குறிப்பிடத்தக்கது.