இலகுவில் செய்யக்கூடியவற்றை கூட அரசு செய்யத்தவறிவிட்டது!

இலகுவில் செய்யக்கூடிய விடயங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் சபையின் இலங்கை ஆர்வலர்கள் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முன்னேற்றம் அற்ற நிலைமை காணப்பட்டது.புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஓரளவு முன்னெடுப்புக்கள்மேற்கொள்ளப்பட்டன.

காணிகளை விடுவித்தல் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்றன தொடர்பில்செய்யக்கூடிய ஆற்றக்கூடிய கருமங்களை அரசாங்கம் ஆற்றத் தவறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில்அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.இதனால் மக்கள் தொடர்ந்து அதிருப்தி அடைந்துள்ளனர்.

அரசியல் அமைப்பு விடயங்கள் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.எனினும் அன்றாடம் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறையவில்லை.

எனவே, இந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு உரிய நலன்களை வழங்கவில்லை எனதெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத்காரியவசம் பரிந்துரைகள் மெதுவாகவே நிறைவேற்றப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டைஏற்றுக்கொள்வதாக கூறினார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் எல்லா விடயங்களும் நிறைவேற்றப்படும், அதில் தாமதம் ஏற்பட்டிருக்குமே தவிர நிறைவேற்றப்படாத நிலை ஏற்படாது எனகாரியவசம் கூறியிருந்தார் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காஅரசாங்கம்சுமந்திரன்தமிழர்கள்வாக்குறுதிகள்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment