இலங்கை விவகாரம் சர்வதேச அரங்கிற்கு சென்றுள்ள நிலையில் இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இலங்கைக்கு சென்றுள்ளார்.
மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக நியமிக்கப்பட்ட அலய்னா ரெப்லிட்ஸ் திடீரென நேற்று மாலை இலங்கைகக்கு வ்ஜயம் செய்துள்ளார்.
அமெரிக்கத்தூதுவர் அலய்னா இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதேவேளை அரசியல் குழப்ப நிலை தொடர்பாக அரசியல் தலைவர்களை தனித்தனியே அமெரிக்கத்தூதுவர் அலய்னா சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.