இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த்த வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா, நேற்றைய தினம் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது இந்தியப் பெருங்கடலில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து தொடர்பாக இலங்கை எப்போதுமே அர்ப்பணிப்புடன் இருந்து வந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடா நாடுகள் அடுத்த 20 ஆண்டுகளில் சடுதியாக வளர்ச்சியடையும் என்றும்,
இந்தப் பிராந்தியத்தியங்களில் மத்திய துறைமுகமாக திருகோணமலைத் துறைமுகம் மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பானின் உதவியை இலங்கை எதிர்பார்க்கின்றதாகவும் அவர் இதன்போது குறிபிட்டுள்ளார்.
மேலும் இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய அமைதி குறித்துப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.