கேரளாவின் கசரகோட் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ராஹிட் அப்துல்லா மற்றும் ஹஃபீசுடீன் ஆகிய இருவரும், கேரளா பாலக்காட்டைச் சேர்ந்த எஸ்ஸாவுமாக மொத்தம் மூன்று பேர் இலங்கைக்கு வந்திருப்பதாக அந்தச் செய்தி கூறுகிறது. ஐ எஸ் இல் இணைந்திருப்பதாக நம்பப்படும் இம் மூவரும் இஸ்லாமிய மதக் கல்வி பெறுவதற்காக தாங்கள் இலங்கையிலுள்ள ஹதீஸ் நிலையத்திற்கு பயணப்படுவதாக தமது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இருப்பதாக சொல்லப்படும் ஹதீஸ் நிலையம் பற்றியோ அல்லது குறித்த மூன்று சந்தேக நபர்களும் இலங்கைக்கு வந்து விட்டார்களா என்பது குறித்தோ இந்திய உளவுப் பிரிவு இதுவரை ஊர்ஜிதப்படுத்தவில்லை. இதற்கு முன்னர் கேரளாவில் இருந்து இத்தகைய இளைஞர்கள் யேமன் நாட்டின் டம்மாஜ் இல் இருக்கும் டாருல் கதீதுக்கு பயணப்பட்டுள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 12 இஸ்லாமிய அடிப்படைவாத இளைஞர்கள் யேமனுக்கு பயணித்துள்ளனர்.
டம்மாஜ் வீழ்ச்சிக்கு பின்னர் இலங்கையில் உள்ள ஹதீஸ் பிரபலமடைந்திருப்பதாக குறித்த செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் மதப் பிரசார வகுப்புக்களை நடத்திய இலங்கையர் ஒருவரை உளவுப் பிரிவினர் கைது செய்தனர். அவர் மீது வழக்கு தொடுக்காமல் குறித்த நபர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது