இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க 17 நாட்டின் தூதரக பிரதிநிதிகளை சந்தித்து மகஜர் கையளிப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கை அடங்கிய மகஜர் வடக்கு கிழக்கில் 8 எட்டு மாவட்டங்களின் பிரதிநிதிகள் கொழும்பில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகத்தில் 17 நாட்டு தூதுவராலயங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கையளித்துள்ளனர். உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றபோது வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என இதில் கோரப்பட்டுள்ளது.

அத்தோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கண்டறிய சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது. குறித்த மகஜர் பிரித்தானியாஇ கனடா ஜேர்மன் அவுஸ்ரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுபிரதிநிதிவலிந்து
Comments (0)
Add Comment