தமிழக அரசின் தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும், அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படக்கூடாது என இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. மேலும், தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணிக்கும் செயலிலும் இந்திய அரசு ஈடுபடக்கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை சந்திப்பில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைகோ தலைமையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். மேலும் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.