இலங்கைக்கு இராணுவ உதவிகள் உட்பட பலவகை உதவிகளை வழங்கப்படும் –மோடி

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதர் நரேந்திரமோடி அந்த நாட்டிற்கு இராணுவ உதவிகள் உட்பட பலவகை உதவிகளை வழங்கவுள்ளார், இலங்கையில் பல பில்லியன் டொலர்களை செலவுசெய்து சீனா பெற்றுள்ள செல்வாக்கை குறைப்பதற்காகவே மோடியின் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன என ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

இந்தியாவின் முன்னைய அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்ட மாலைதீவு ,மொறிசியஸ் மற்றும் சீசலஸ் தீவுகளுக்கான தனது விஜயத்தின் போது மோடி உதவிகள் குறித்த வாக்குறுதிகளை வழங்குவார். 28 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு இந்திய பிரதமர் ஓருவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனா,இந்த சிறிய தீவுகளில் துறைமுகங்களை, மின்நிலையங்களை, வீதிகளை அமைத்துள்ளது. அதன் கடற்படையும் இந்து சமுத்திரத்திற்குள் ஆழமாக ஊருடுவியுள்ளது.கடந்த வருடம் இலங்கை துறைமுகத்திற்குள் சீனா நீர்மூழ்கிகள் சென்றமை புதுடில்லியை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பதட்டமான உறவுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா இந்த தீவுகளுடன் பாதுகாப்பு உறவுகளை நெருக்கமாக்குவதன் மூலம் அவற்றை தனது அரவணைப்பிற்குள் கொண்டுவர விரும்புகின்றது என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்து சமுத்திரத்திற்கு பாதுகாப்பை வழங்கும் நாடு என்ற பங்களிப்பை இந்திய ஆற்றவேண்டி உள்ளது என 10 திகதி ஆரம்பமாகும் இந்த தீவுகளுக்கான மோடியின் பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அதிகாரி ஓருவர் தெரிவித்தார்.

நாங்கள் ரோந்து படகுகளை, ராடர்களை, இந்த தீவுகளுக்கு வழங்குகின்றோம், என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மோடியின் பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையே முக்கியமானதாக காணப்படுகின்றது. இங்கு புதிதாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள அரசாங்கம் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கு காரணமாக கவலை கொண்டுள்ளதுடன், சீனாவின் உதவியுடன் முந்தைய அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்களை ஆய்விற்குட்படுத்தியுள்ளது.மேலும் இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் சீனா நீர்மூழ்கிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையுடன் பாதுகாப்பு ஓத்துழைப்பை மோடி மேலும் தீவிரப்படுத்துவார். திருகோணமலையில் ஏற்படுத்தப்பட உள்ள மின்நிலையத்திற்கான இறுதி அங்கீகாரத்தை வழங்குவார் எனவும் தெரியவருகின்றது. இலங்கைக்கு வழங்கப்படும் இராணுவபயிற்சியை மேலும் தரமுயர்த்துவது குறித்தும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளன.

பாதுகாப்பு தேவைகள்:

கடந்த வருடம் இந்திய பாதுகாப்பு அமைச்சு இந்த தீவுகளின் கடல்சார் தேவைகள் குறித்து ஆராய்ந்தது,அதற்கு தீர்வு காண அது முயல்கின்றது என இந்திய பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். மொறிசியஸ் விஜயத்தின் போது மோடி இந்தியாவின் 1300 தொன் கடலோர கண்காணிப்பு படகை வெள்ளோட்டம் விடுவார்,

மொறிசியசிற்கு நாங்கள் கிட்டத்தட்ட கடலோர எல்லைக் காவற்படையையே வழங்கியுள்ளோம் என இந்திய கடற்படையின் முன்னாள் புலனாய்வு பிரிவு அதிகாரி ரஞ்சித் ராய் தெரிவிக்கின்றார். ஏனைய நாடுகளுக்கும் இதே போன்ற உதவிகள் தேவைப்படுகின்றன என்கிறார் அவர்.

இலங்கைக்கு மீன்பிடி படகுகள் தொடர்பான உதவி தேவையாகவுள்ள அதேவேளை மாலைதீவிற்கு கடற்கொள்ளையர் மற்றும் ஜஎஸ் அமைப்பின் ஊருடுவல் போன்றவற்றிலிருந்து தன்னை பாதுகாப்பதற்கான உதவி அவசியமாகவுள்ளது. மாலைதீவு விமானநிலையத்தை தரமுயர்த்தும் பணிகளையும் இந்தியா மேற்கொள்ளவுள்ளது.
ஆபிரிக்காவில் கடற் கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு;ள்ள கப்பல்கள் எரிபொருள் மீள்விநியோகத்தினை மேற்கொள்வதற்கு சீசலஸ் பொருத்தமான துறைமுகம் என சீனா கருதுகின்றது.

எனினும் சிறிய நாடுகள் இந்தியா அல்லது சீனாவா தங்களுக்கு தேவை என்பதை தீர்மானிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை மோடி ஏற்படுத்தக்கூடாது என்கிறார்இந்து சமுத்திர பாதுகாப்பு குறித்த நிபுணர் விஜய் சகுஜா.

இலங்கை உட்பட இந்து சமுத்திர பகுதியில் உள்ள சிறிய தீவுகளுக்கான சீனாவின் இராணுவ ஆதரவே இந்தியாவிற்கு அதிகளவு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.அதனால் இந்த விவகாரங்களை அவர் தனது விஜயத்தின் போது கிளறாமலிருப்பது நல்லது,அது இந்தியாவா அல்லது சீனாவா என்ற நெருக்கடி நிலையை சிறிய நாடுகளுக்கு உருவாக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாஇராணுவம்இலங்கைஉதவிசீனாசெலவுசெல்வாக்குடொலர்நரேந்திரமோடிபயணம்பில்லியன்வழங்கல்
Comments (0)
Add Comment