இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள உலக வங்கி

இலங்கை அரசியல் நிலை மாற்றங்களினால் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படலாம் என உலக வங்கி எச்சரித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட அசாதாரணமான சம்பவங்களினால் முதலீடு செய்வதில் ஆர்வம் குறையலாம் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

அத்தோடு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்பு நாட்டின் அரசியல் தன்மை நம்பிக்கையற்ற விதமாக காணப்படுவதாக உலக வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


உலக வங்கி
Comments (0)
Add Comment