இலங்கைக்கு தொடர்ந்தும் தாக்குதல் எச்சரிக்கை..

இலங்கைக்கு தொடர்ந்தும் தாக்குதல் எச்சரிக்கை இருப்பதாக இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதோடு தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் , இத்தாக்குதல்களானது இளைஞர்களை தூண்டுவதாக அமைந்துள்ளதென்றும் குறித்த இராணுவ புலனாய்வு அதிகாரி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரானுவ அதிகாரிதாக்குதல்
Comments (0)
Add Comment