33 வயதான குறித்த நபரைக் கைது செய்ய இலங்கையானது சர்வதேச பொலிஸாரின் உதவியை உத்தயோகப்பூர்வமாக நாடியுள்ளதால், சர்வதேச பொலிஸார் இந்த சிவப்பு எச்சரிக்கையினை பிறப்பித்துள்ளனர்.
கொலைக் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் நீதிமன்றத்திற்கு தேவையான நபர் என கொஸ்கொட சுஜி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் இரண்டு இலங்கையர்களைக் கைதுசெய்ய வேறு இரண்டு நாடுகளின் வேண்டுகோளுக்கமைய சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கையை பிறப்பித்திருந்தனர்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அமைதியாக நடத்தவும், தெற்கில் பாதாள கோஷ்டியினரின் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் இலங்கைப் பொலிஸார் இவ்வாறு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.