இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு சார்க் நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை…

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட கலாநிதி சரத் அமுனுகம நேற்றையதினம்,  சார்க் நாடுகளின், தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பு  இலங்கை  வெளிவிவகார அமைச்சில்  இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின்  தற்போதைய அரசியல் நிலவரங்களை எடுத்துக் கூறியுள்ள சரத் அமுனுகம, புதிய அரசாங்கத்துக்கு சார்க் நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிகபப்ட்டுள்ளது.

அதோடு  இருதரப்பு மற்றும் பரஸ்பர உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பாகவும், இந்த சந்திப்பில்  கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஸ், மாலைதீவு ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சந்திப்பில் இலங்கை  வெளிவிவகார அமைச்சின் செயலராக நேற்றையதினம்  பதவியேற்ற ரவிநாத் ஆரியசிங்கவும், கலந்துகொண்டதாக தெரிவிகபப்ட்டுளமை குறிப்பிடத்தக்கது.

அமைப்புசந்திப்புசார்க்நாடுகள்ராஜதந்திரிகள்
Comments (0)
Add Comment