இலங்கையில் இருந்தும் சிலர் பனாமா ஆவணங்களில் சிக்கியுள்ளனர்

நாட்டு மக்களில் சிலர் பனாமா நாட்டில் உள்ள பொன்சேகா சட்ட நிறுவனத்தில் நிறுவன கணக்குகளை ஆரம்பித்துள்ளதாக கௌரவமான தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். பண்டாரகம நகரில் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் ஒன்றை திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பனாமாவில் கணக்குகளை வைத்துள்ளவர்கள் யார், இந்த கௌரவமான வர்த்தகர்கள் யார், இந்தளவு பெரிய செல்வந்தர்கள் யார் என்பன குறித்து பொறுப்பு நாட்டின் அரசாங்கத்திற்கு இருப்பது போல் பொலிஸாருக்கும் உள்ளது. கறுப்பு பணம் அல்லது திருட்டு பணத்தை மறைத்து வைக்க உலகில் சில இடங்கள் உள்ளன. சிங்கப்பூர், பனாமா ஆகிய நாடுகளை போல் ஐரோப்பாவில் மேன் ஒப் ஐல்ஸ் என்று தனியான தீவு உள்ளது. அதேபோல் துபாய் நாட்டிலும் கறுப்பு பணத்தை பதுக்கி வைக்கலாம். பல்வேறு வழிகளில் முறைகேடாக சம்பாதித்த பணம் போலியான நிறுவனங்களின் பெயர்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளமை சம்பந்தமான பனாமாவில் உள்ள பொன்சேகா என்ற சட்ட நிறுவத்தின் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆவணங்களில் சுமார் இரண்டாயிரம் நிறுவனங்கள் சீசெல்ஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டவை. எமது நாட்டை சேர்ந்த சிலர் கடந்த மிகவும் அக்கறையாக சீசெல்ஸ் நாட்டுடன் கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பித்தனர். பொதுமக்களால், தெரிவு செய்யப்பட்டவர்களின் குடும்பங்களில் உள்ள மிகப் பெரியவர்கள் சீசெல்ஸில் கணக்குகளை ஆரம்பித்தனர் எனவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.

அஜித் பீ. பெரேராஇலங்கைகணக்குகௌரவவிபரம்சட்டநிறுவனம்பனாமாபொன்சேகாமக்கள்
Comments (0)
Add Comment