இலங்கையில் நாளைமுதல் இலத்திரனியல் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு அறிமுகம் …

இலங்கையில்  நாளை முதல் இலத்திரனியல் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக துறைசார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் பயணிக்க கூடிய கடவுச்சீட்டுக்களின் விநியோக நடடிக்கைகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதோடு  நாளை முதல் மத்திய கிழக்கு நாடுக்கு மாத்திரம் பயணிக்கும் விதத்தில் விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிகப்படுகின்றது.

மாறாக நாளை முதல் அனைத்து நாடுகளுக்கும் பயணிக்கும் விதத்திலான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடவுச்சீட்டினூடாக மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பயணிக்க முடியும் என, குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கையும்  ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அடையாள அட்டையை பரீட்சார்த்தமாக முன்னெடுக்கும் நடவடிக்ககை மேல், சப்ரகமுவ மாகாணங்களில் வழங்கும் பணி கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை நினைவில்கொள்ளத்தக்கது.

குறித்த பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியடைந்திருப்பதால் இந்த வேலைத்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்பதிவு திணைக்களம்குடியகல்வு திணைக்களம்குடிவரவுதுறைசார் நிறுவனங்கள்
Comments (0)
Add Comment