விசேடமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 75 மில்லிமீற்றர் அளவிலான கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல மாகாணங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மழை பெய்யும் போது, நாட்டில் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அந்த நிலையம் இன்று நண்பகல் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.