சிறிலங்காவில் இலஞ்ச ஊழல் பாரியளவில் கடன் வழங்கும் சீனாவும், சிறிலங்காவில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதனை ஒப்புக்கொண்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக சீனப் பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லெண்ண அடிப்படையில் சீனா சிறிலங்காவுக்கு கடன் உதவிகளை வழங்கி வருவதாகவும், சிறிலங்கா தலைவர்களும் அரசியல்வாதிகளும் மேசாடிகளில் ஈடுபட்டு வருகின்றமையை சீனா புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு வரையில் தேசிய கடன் 1.8 ட்ரில்லியன் ரூபாவாகக் காணப்பட்டதாகவும், தற்போது 6.6 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் 4.8 ட்ரில்லியன் ரூபா கடனைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இந்தக் கடன் அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளினால் அதிகரித்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.