இந்தியா இராமேஸ்வரம் பகுதியில் 200 கிலோ கஞ்சாவுடன் இலங்கையை சேர்ந்த இருவர் கரையோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் இலங்கைக்கு கடத்தி செல்லும் நோக்கில் வைத்திருந்த 200 கிலோ கஞ்சாவினையும் கரையோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் இலங்கை நோக்கி புறப்படத் தயாரான சமயம் இந்திய கரையோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த படகு புத்தளம் சிலாபம் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.