கொடைக்கானல் அருகே இலங்கை அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்பு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் கேட்டபோது கிராம நிர்வாக அலுவலரை வைத்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.